மீன் புட்டு கறி

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • முள்ளில்லாத மீன் அரை கிலோ
  • மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
  • வெங்காயம் 5
  • மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
  • மிளகு தூள் 1 டீஸ்பூன்
  • சீரகத் தூள் 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் 3
  • பூண்டு 7 பல்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி
செய்முறை :

முள்ளில்லாத மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வேக வைத்த பின் மீனை ஆற வைத்து முள் இன்றி பிசைந்து வைக்கவும்.

இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தேவைக்கேற்ப உப்பு (வேகவைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக சேர்க்கவும்) சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை சேர்த்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடவும். இது சுருள வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
ருசியான மீன் புட்டு கறி ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

Post a Comment

0 Comments