கற்றாழை மகத்துவம்


சருமத்தின் இயற்கையான அழகை மேம்படுத்தவும் அல்ட்ராவயலட் கதிர்களிலிருந்து காக்கவும் கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையின் உள் பகுதியில் இருக்கும் வெள்ளை நிற சதைப் பகுதியில் இருந்து சரும டானிக்,சன் கிரீம் லோஷன் தயாரிக்கிறார்கள்.தீக்காயம்பட்ட பகுதியில் கற்றாழைச்சாறு தேய்ப்பது மிக நில்லது. 

கற்றாழை சதைப் பகுதியை எண்ணையில் காய்த்து தலையில் தேய்த்தால் கூந்தல் நன்றாக வளரும்.கண் சிவப்பு,கட்டி இவை மறைய கற்றாழையின் சோற்றுப் பகுதியால் ஒத்தடம் கொடுப்பது நல்ல பலன் தரும். 

சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும். 

சோற்று கற்றாழையின் இலையை கீறி உள்ளே சோற்று பகுதியை எடுத்து, கழுவி சுத்தம் செய்து சிறு துண்டு தினமும் காலை வேலையில் சாப்டு வர, கண்பார்வை கூர்மை அடையும். 

கற்றாழை சோற்றுடன், இஞ்சி, சீரகம் வைத்து அரைத்து நெல்லிக்காய் அளவு தின்று வர, பித்தம் தீரும். 

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும். 

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் கூட கற்றாழைச்சாறு பயன்படும். 

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும். 

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், தேனுடன் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஆஸ்துமா விரைவில் குணமாகும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் இதைக் கொடுக்கக் கூடாது. காரணம், உடலில் குளிர்ச்சியை அதிகப்படுத்திவிடும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் கற்றாழையை உண்ணாமல், வெளிப்புறம் மட்டும் பயன்படுத்தலாம். 

கற்றாழையுடன் சர்க்கரை, ஐஸ் கட்டி, சாதாரண உப்பு போன்றவற்றைக் கலந்து சாப்பிடக் கூடாது. 

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை நீக்கி குறைந்தது ஏழு முறை அதன் வழுவழுப்புத்தன்மை மற்றும் கசப்புத்தன்மை நீங்கும் வரை சாதாரண நீரில் கழுவ வேண்டும். பிறகு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் மோர், தயிர், தேவையான அளவு கருப்பு உப்பு சேர்த்து மத்தால் கடைந்தால் கற்றாழை ஜூஸ் ரெடி.

Post a Comment

0 Comments