சுக்கின் மருத்துவ குணங்கள்


நல்லெண்ணை விளக்கில் சுக்கு மீது சுண்ணாம்பு தடவிய பகுதியை காட்டி அந்த கருமைப் பொடியை தேனில் குழைத்து உண்ண நாள்பட்ட மூலம் குணமாகும். 

இது ரத்தக் குழாய்களின் செயலை மேம்படுத்தி, இதய இயக்கத்தை வலுவாக்குவது சுக்கின் பணி. சுக்கில் இருக்கும் காரத்தன்மை, ஜீரணத்திற்கு பிறகு மீதமிருக்கும் பித்த நீரை சமன்செய்துவிடும். அதனால் வயிற்றுப் புண் ஏற்படுவது தடுக்கப்படும். 

ஏற்கனவே புண் இருந்தாலும் ஆற்றும். மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். எஞ்சிய பித்த நீர் சமன்செய்யப்படாவிட்டால் அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கொலாஸ்ட்ரால் ஆகிவிடும். மதிய உணவுக்குப் பிறகு 5 கிராம் சுக்கு தூளை சுடு நீரில் கலந்து பருகவேண்டும். 

சுக்கை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொள்வது மிகவும் நல்லது. சாப்பிடுவதும் நன்றாக ஜீரணம் ஆகும். 

ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும். சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும். 

சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும். 

ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும். 

உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.

Post a Comment

0 Comments