ப்ரெட் கட்லெட்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:

1. பிரெட் ஸ்லைஸ்
2. பெரிய உருளைக் கிழங்கு
3. பாலாடைக் கட்டி (சீஸ்)
4. மைதா மாவு
5. பொடியான பிரெட் துகள்கள்
6. கொத்துமல்லி
7. உப்பு
8. பச்சை மிளகாய்
9. எண்ணெய்

செய்முறை :

1. உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பாலாடைக் கட்டி எனப்படும் சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதாமாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை மண் இல்லாமல் ஆய்ந்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. முதலில் பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொள்ளவும்.
3. பிறகு நன்கு மசித்த உருளைக் கிழங்கு, துருவிய சீஸ், நறுக்கிய மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகிய இவற்றை எல்லாம் பிழிந்த பிரெட் துண்டுகளுடன் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு பெரிய எலும்பிச்சை அளவுக்கு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
4. பிறகு நீங்கள் உருட்டிய உருண்டைகளை கரைத்த மைதா மாவில் முக்கி எடுத்துப், ப்ரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெய்யில் பொன்னிறம் வரும் வரையில் தீய விடாமல் நன்கு பொரித்து எடுக்கவும். பிறகு பரிமாறவும்.
5. இதோ இப்போது சுவையான ப்ரெட் கட்லெட் தயார்.

Post a Comment

0 Comments