ஆனியன் மீன் ரோஸ்ட்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:

1. மீன்
2. மிளகு
3. மஞ்சள் தூள்
4. சின்ன வெங்காயம்
5. தனியா
6. எண்ணெய்
7. பச்சை மிளகாய்
8. கடுகு
9. சீரகம்
10. இஞ்சி பூண்டு விழுது
11. காஷ்மீர் மிளகாய்
12. உப்பு

செய்முறை :

1. மீனை முதலில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. சுக்கு, தனியா, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள், சீரகம், மிளகு, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
3. இப்போது மேற்கண்டவற்றுடன் போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கி மசாலா பதத்தில் கொண்டு வரவும்.
4. இவ்வாறு தயாரான அந்த மசாலாவை மீன் மீது நன்கு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
5. இப்போது ஊற வைத்த அந்த மீனை எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.
6. இப்போது இன்னொரு வாணலியில் வெங்காயத்தை வதக்கும் அளவிற்கு போதுமான எண்ணெய்யை ஊற்றி நன்கு காய வைக்கவும்.
7. எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பச்சை வாசனை வராமல் பொன்னிறத்தில் வறுக்கவும்.
8. இப்போது அவ்வாறு வறுத்த அந்த வெங்காயத்தை மீனின் மேல் தூவவும்.
9. இதோ இப்போது சுவையான ஆனியன் மீன் ரோஸ்ட் தயார்.

மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.


Post a Comment

0 Comments