பிரட் போண்டா


பிரட் போண்டா - வெளிநாட்டுப் பாரம்பரியத்துடன் சேர்ந்த நம் நாட்டு சிற்றுண்டி

தேவையான பொருள்கள்:

1. ப்ரெட் ஸ்லைஸ் அல்லது துண்டுகள்
2. மிளகாய்ப் பொடி
3. கடுகு
4. சீரகம்
5. உப்பு
6. சமையல் எண்ணெய்
7. பெரிய உருளைக் கிழங்கு
8. கோஸ்
9. பெரிய வெங்காயம்

செய்முறை:

1. வெங்காயத்தை தோல் உரித்துப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. உருளைக் கிழங்கு, கோஸ் (தேவைப்பட்டால் 12 இதழ்கள் உரித்தப் பூண்டு) ஆகிய இவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் முன்னமே பிய்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
4. ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அது நன்கு காய்ந்த மாத்திரத்தில் கடுகு, சீரகம் ஆகிய இவற்றை தாளித்து உடன் நறுக்கிய வெங்காயம் (தேவைப்பட்டால் பூண்டு) போட்டு நன்கு வதக்கவும்.
5. பச்சை வாசனை போகும் வரையில் தீய விடாமல் வறுத்த பிறகு எஞ்சி இருக்கும் முட்டைக் கோஸ், உருளை, உப்பு, மிளகுத் தூள் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு வேகும் வரையில் தண்ணீரை ஊற்றாமல் அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறி தாளித்த கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும். இது பார்க்க மசாலா போல இருக்கும்.
6. இப்போது ஓரங்கள் பிய்த்து ஏற்கனவே வைத்து இருக்கும் பிரெட் துண்டுகளை சிறிது தண்ணீரில் நனைத்து உள்ளங்கையில் வைத்துப் பிழியவும்.
7. பின்னர் பிரெட் துண்டுகளின் நடுவில் நீங்கள் வதக்கி வைத்து இருக்கும் மசாலாவை வைத்து நன்கு மூடி உருட்டவும். பிறகு நன்கு காய்ந்த எண்ணெய்யில் பொன்னிறம் வரும் வரையில் நன்கு தீய விடாமல்  பொரித்தெடுக்கவும்.
8. இதோ இப்போது சுவையான பிரெட் போண்டா தயார்.


Post a Comment

0 Comments