கற்றாழையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா ?


கற்றாழையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
நம்மளுடைய செயலியில் அனைத்து வகுப்புகளுக்கும் 1st std முதல்  12th std வரை தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோ பதிவுகளை பதிவிட்டு உள்ளோம். பார்த்து படித்து பயன்பெறுங்கள்

இந்தப் பயனுள்ள வீடியோ தொகுப்பை அனைத்து மாணவர்களுக்கும் பகிருங்கள். அவர்களும் பார்த்து பயன் பெறட்டும்.

சித்த மூலிகைகளில் தனி சிறப்பிடம், காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழைக்கு உண்டு. முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல் வலிவைப் பெற்றனர்.

சோற்றுக் கற்றாழை மடல்களின் தோலை நீக்கி, அதன் சதைப் பகுதியை சேகரித்து ஆறேழு முறை அலசிவர, அதன், வீச்சம் நீங்கும். அதனை காலநிலைக்கேற்ப, கோடைக்காலமெனில் வெறுமனே நெல்லிக்காயளவு சாப்பிடலாம், குளிர்காலங்கள் எனில், அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

இப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர, உடலில் இரத்தத்தில் கலந்திருந்த நச்சுக்கள் வெளியேறும், உடல் உள் உறுப்புகளின் சூடு குறையும், உடலின் சோர்வு விலகும்.

முகத்தில் உள்ள நச்சுப் பருக்கள் மற்றும் உடல் காயங்கள் ஆறி மறையும், மலச்சிக்கல் நீங்கும், உடலின் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து உடல் வளமாகும்.

உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்கும், செரிமானக் கோளாறுகள் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் விலகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் புதிய இரத்த செல்களை அதிகரித்து உடல் முதுமையைத் தடுத்து, இளமையை காக்கும் இயல்புடையது.

இந்த முறைகளில் வீடுகளில் சாப்பிடுவதை தற்போது, நகரங்களில் சோற்றுக் கற்றாழை ஜூஸ் என விற்கின்றனர், ஆயினும், சோற்றுக் கற்றாழையை அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே, சிறப்பான முறையாகும்.

விளக்கெண்ணையுடன் சோற்றுக்கற்றாழையை காய்ச்சி, சிறிதளவு இருவேளை சாப்பிட்டு வர, வயிற்றுப் புண், வயிறு வீக்கம் மற்றும் சில பெரியவர்களுக்கு உள்ள நெடு நாள் மலச்சிக்கல் நீங்கும், உடலின் சூடு குறைந்து, உடல் வனப்புடன் திகழும். உணவில் புளி, காரம் நீக்கி இதையே தினமும் சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி மட்டுப்படும்.

விளக்கெண்ணையுடன் சோற்றுக்கற்றாழையை காய்ச்சி, சிறிதளவு இருவேளை சாப்பிட்டு வர, வயிற்றுப் புண், வயிறு வீக்கம் மற்றும் சில பெரியவர்களுக்கு உள்ள நெடு நாள் மலச்சிக்கல் நீங்கும், உடலின் சூடு குறைந்து, உடல் வனப்புடன் திகழும். உணவில் புளி, காரம் நீக்கி இதையே தினமும் சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி மட்டுப்படும்.

அலசி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றாழையுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம், நெய்யுடன் சேர்த்து உண்டுவர, நாள்பட்ட வறட்டு இருமல் தீர்ந்துவிடும்.

சோற்றுக் கற்றாழை சதைகளை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் பெண்கள் சாப்பிட்டு வர, மாத விலக்கு இன்னல்கள் தீரும்.

நன்கு அலசி சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சதைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கடுக்காய்ப் பொடி சிறிதளவு இட, சோற்றுக் கற்றாழை சதையிலிருந்து நீர் தனியே விலகும், அதை சேகரித்து அத்துடன் ஏழெட்டு துளிகள் எலுமிச்சை சாறு இட்டு, தினமும் காலைவேளையில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இதன்மூலம், உடலில் அதிகமுள்ள வாயு [வாதம்], பித்தம் [சூடு], மற்றும் நீர் [கபம்] நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதை உணரலாம். இதை மூன்று நாட்கள் சாப்பிடலாம்.

சோற்றுக் கற்றாழை, மஞ்சள் இவற்றை நன்கு அரைத்து, வெயில் பட்டு கறுத்துப்போன, உடலின் கைகால் மூட்டுகள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி சிறிதுநேரம் கழித்து, நன்கு தேய்த்து குளித்துவர, தோல் நோய்கள் விலகி, வெயிலில் பட்ட கருமைகள் நீங்கி, உடல் வனப்பாகும்.

சோற்றுக்கற்றாழை வேர்களை சுத்தம் செய்து, ஆவியில் வேகவைத்து, பின் வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி, பாலில் பனங்கற்கண்டு சேர்த்து இரவில் சாப்பிட்டுவர உடல் வளமாகி தாம்பத்தியம் மேம்படும்.

Post a Comment

0 Comments