உருளைக்கிழங்கு பிரியாணி

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பாசுமதி அரிசி - 250 கிராம்
  •  உருளைக்கிழங்கு - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  •  இஞ்சி, பூண்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன்
  •  வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
  •  மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
  •  மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்
  •  கறிவேப்பிலை - சிறிதளவு
  •  தயிர் - 3 டீஸ்பூன்
  •  நெய் - 2 டீஸ்பூன்
  •  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :

முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி... உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் தனித்தனியாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி. பொரித்த வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து.

தயிர், உப்பு, உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வேக வைத்து இறக்கவும்.

Post a Comment

0 Comments