ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • தயிர் – 1 /2 கப் கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறு – 2 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு
  •  கிராம்பு – 3 ஏலக்காய் – 3
  •  இஞ்சி, பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
  •  மல்லித்தழை – 1 /4 கப்
  •  மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
  •  புதினா – 1 /2 கப்
  •  சிக்கன் ஊற வைப்பதற்கு : பச்சை மிளகாய் – 5 -6
  •  மிளகு – 7 – 8
  •  பாஸ்மதி அரிசி – 3 கப்
  •  பட்டை – 1
  •  பிரியாணி இலை – 1
  •  நெய் – 2 மேசைக்கரண்டி மல்லித்தழை – 1 /4 கப் புதினா – 1 /4 கப் குங்குமப்பூ – 1 தேக்கரண்டி வெது வெதுப்பான பால் – 1 /2 கப்
  •  கிராம்பு – 2
  •  மராட்டி மொக்கு – 1
  •  மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
  •  கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
  •  அனாசிப்பூ – 1
  •  சிக்கன் எலும்புடன் – 3 /4 கிலோ
  •  எண்ணெய் – 1 /4 கப்
  •  வெங்காயம் – 2
செய்முறை :

முதலில் அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடையில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சிக்கனை கழுவி வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை நீங்கலாக மீதமுள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இறுதியாக புதினா, மல்லித்தழை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து, சிக்கன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களையும் இதனுடன் சேர்த்து ஊற(Marinate) வைக்கவும். இதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் சிறிது சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 1 – 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இதனுடன் நெய், எண்ணெய், கருஞ்சீரகம்,பிரியாணி இலை,மராட்டி மொக்கு அனாசிப்பூ (1 ), பட்டை (1 /4 ” ), கிராம்பு(2 ) சேர்க்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதிக சூட்டில் 3 -4 நிமிடங்கள் வரை வேக வைக்கவும் அல்லது சாதம் அரை பதமாகவெந்திருந்தால் போதுமானது(50 %). உடனடியாக சாதத்தை வடித்து தனியே வைக்கவும்.(சாதம் நன்றாக வெந்திருக்கக் கூடாது ).
குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து வைத்திருக்கவும். அதே அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து 2 நிமிடங்கள் அதிக சூட்டில் வைக்கவும். இதன் மேலே வேக வைத்துள்ள சாதத்தை கொட்டி பரப்பி விடவும். இதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா இலை சேர்க்கவும்.
இறுதியாக குங்கம்பூ கலவையை ஊற்றவும். பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். கண்ணாடி மூடியில் ஆவி வெளியே செல்லாது. சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும் அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம் அல்லது திக்கான சமையலறை துண்டால் இருக்கக் கட்டி பின் அதற்கு மேலே மூடி போட்டுக் கொள்ளலாம்.
அதிக சூட்டில் 2 – 3 நிமிடங்கள் வரை வைக்கவும். பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து விடவும். இப்போது அடி கனமான தட்டையான நான் – ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். பாத்திரம் சூடானதும், இதன் மேலே பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை வைத்து 30 நிமிடங்கள் வரை வேக விடவும். மிகவும் குறைந்த தீயில் வைத்தால் 40 நிமிடங்கள் வரை ஆகும். சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார்.

Post a Comment

0 Comments