குல்பி ஐஸ்கிரீம்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பால்3 லிட்டர்
  • பாதாம்30 கிராம்
  • பிஸ்தா 30 கிராம்
  • முந்திரி30 கிராம்
  • கார்ன்ஃப்ளார்2 ஸ்பூன்
  • ரோஸ் எசன்ஸ்2 ஸ்பூன்
  • ஐசிங் சுகர்400 கிராம்
  • ஜெலட்டின் 3 ஸ்பூன்
செய்முறை :

குல்பி ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பாலானது பாதியளவு குறையும் வரை சுண்ட காய்ச்சவும். பால் சுண்டி வரும்போதே அதில் ஐசிங் சுகரை போடவும்.
பிறகு அடுப்பில் இருந்து பாலை இறக்கி, அதிலிருந்து சிறிது பாலை எடுத்து, அதனுடன் கார்ன்ஃப்ளாவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் கேஸ் ஸ்டவ்வில் வைத்து ஸ்டவ்வை சிம்மில் வைத்து கிளறி, நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
பிறகு பாதம், முந்திரி, பிஸ்தாவை நீரில் ஊறவைத்து நன்கு ஊறியதும் அவற்றை எடுத்து அதனுடன் சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு ஜெலட்டினை சு+டான தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
பிறகு கெட்டியான பாலில் முந்திரி கலவை, ஜெலட்டின், ரோஸ் எசன்ஸ் ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறைய வைக்கவும். சுவையான குல்பி ஐஸ்கிரீம் ரெடி.

Post a Comment

0 Comments