செட்டிநாடு இறால் பிரியாணி

Time: 50 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • இறால் – அரை கிலோ
  • பிரியாணி அரிசி – அரை கிலோ
  • இஞ்சி – 1 துண்டு (அரைக்கவும்)
  • பூண்டு – 10 பல் (அரைக்கவும்)
  • பட்டை, ஏலக்காய் – 2+2 துண்டு (அரைக்கவும்)
  • வெங்காயம் – 2 (நீளமாக வெட்டவும்)
  • பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டவும்)
  • தக்காளி – 3 (நீளமாக வெட்டவும்)
  • தயிர் – அரை கப்
  • மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - 50 கிராம்
  • புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • ஏலக்காய் - 2
செய்முறை :

இறாலை கழுவி சுத்தம் செய்யவும்.
அரிசியை ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயம், புதினா, பச்சை மிளகாய், தக்காளி வதக்கி இஞ்சி, பூண்டு, பட்டை விழுது போட்டு வதக்கி மிளகாய்த்தூள், உப்பு, தயிர், கொத்தமல்லி, இறால் போட்டு கொதி வந்த பிறகு அரிசி (1+1) தண்ணீர் வைத்து (மசாலா தண்ணீராக இருந்தால் அதைச் சேர்த்து அளக்கவும்)
குக்கரில் ஒரு விசில் வந்த பிறகு இறக்கவும்.
பாத்திரத்தில் பிரியாணி செய்தால் 1+ ஒன்றரை தண்ணீர் வைக்கவும்.

Post a Comment

0 Comments