Chettinad Fish Curry

Time: 50 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • மீன் - 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 10 – 15 (பொடியாக நறுக்கவும்)
  • நாட்டுத் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
  • தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • பூண்டு – 10 – 12 பல் உரித்தது
  • பழைய புளி – 50 கிராம்
  • புளிப்பு மாங்காய் – 1/2
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை :

மீனை (மத்தி) த்தம் செய்து வைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து கறிவேப்பிலை நறுக்கிய பொருள்களை போட்டு நன்றாக வதக்கி, புளியை கரைத்து ஊற்றி தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

(எப்பொழுதும் எந்த குழம்பும் கொதிக்கும் போது ஆரம்பத்திலேயே மூடிவிடவும். அல்லது மூடக்கூடாது. முடிய குழம்பு கொதிக்கும் பொழுது பாதியில் திறக்கக் கூடாது. திறந்தால் மிளகாய்த்தூள் வாடை கடைசி வரை போகாது. கொதிக்கும் குழம்பில் மூடி போடக் கூடாது) எண்ணெய் மிதக்கும் பொழுது மீன், மாங்காய் போட்டு 4 கொதி வந்த பிறகு இறக்கி கொத்தமல்லி தூவி பாதி பக்கமாக மூடிவிடவும்.

முழுவதுமாக மூடக்கூடாது. (புளிப்பு மாங்காய் இருந்தால் புளியை குறைக்கவும்).

Post a Comment

1 Comments