முருங்கைக் கீரை சாதம்

Time: 45 min
Jion with us
Click to Subscribe

உங்கள் சுவையை தூண்டும் முருங்கைக் கீரை சாதம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான முருங்கைக் கீரை சாதம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி & ஒரு கப்,
  •  துவரம்பருப்பு & கால் கப்,
  •  முருங்கை கீரை & அரை கப்,
  •  பெரிய வெங்காயம் & 1,
  •  உப்பு & தேவையான அளவு,
  •  நெய் & 2 டீஸ்பூன்
  •  உளுத்தம்பருப்பு & 2 டீஸ்பூன்
  •  பொட்டுக்கடலை & 2 டீஸ்பூன்,
  •  பச்சரிசி & 2 டீஸ்பூன்
  •  காய்ந்த மிளகாய் & 4,
  •  கொப்பரை துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன்
  •  எண்ணெய் & ஒரு டீஸ்பூன்
  •  தாளிக்க:
  •  கடுகு & அரை டீஸ்பூன்
  •  உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன்,
  •  பூண்டு & 3 பல்,
  •  காய்ந்த மிளகாய் & 1
  •  எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :

முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி சாதத்தில் சேருங்கள்.

அத்துடன் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

Post a Comment

0 Comments