செட்டிநாடு காய்கறி பிரியாணி

Time: 60 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பாசுமதி அரிசி – அரைகிலோ
  • பீன்ஸ், கேரட், காளிஃபிளவர் போன்ற காய்கறிகள்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 6
  • பச்சை மிளகாய் – 5
  • இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
  • தேங்காய் பால் – 2 கப்
  • தண்ணீர் – 3 கப்
  • கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
  • தயிர் - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ் பூன்
  • மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன்
  • பட்டை - 2 துண்டுகள்
  • கிராம்பு – 5
  • பிரியாணி இலை – 1
  • ஏலக்காய் – 3
  • எண்ணெய் - 100 மில்லி
  • நெய் - 3 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
செய்முறை :

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும். முதலில் காய்கறிகள் சிறிதளவு உப்பு, ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் அரைகப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் காய்கறிகள் தனியாக எடுத்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த
காய்கறிகள் சேர்த்து கிளறவும்.இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும்.

இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் தம் போடவும். சாதம் முழுதாக வெந்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாடு காய்கறி பிரியாணி தயார். இத்துடன் தயிர் ரைதா தொட்டுக்கொள்ள இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

Post a Comment

0 Comments