சுவையான கடாய் பனீர்

Time: 30 min
Jion with us
Click to Subscribe

சுவையான கடாய் பனீர் ரெசிபியை, உங்கள் வீட்டு சமையலறையில் எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்! 

தேவையான பொருட்கள்:
  • பனீர் - 250 கிராம்,
  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
  • வெங்காயம், தக்காளி - தலா 2,
  • பச்சை மிளகாய் - 3,
  • தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
  • காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன்,
  • பட்டை - சிறிய துண்டு,
  • கிராம்பு, ஏலக்காய் - தலா 2,
  • சீரகம் - ஒரு டீஸ்பூன்,
  • கொத்தமல்லி, எண்ணெய்,
  • உப்பு - தேவையான அளவு. 
செய்முறை :

கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

எண்ணெய் பிரியும்போது, நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். காய்ந்த வெந்தயக் கீரையை கையில் பொடித்து சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கடாய் பனீர் ரெடி. சப்பாத்தி, புலாவ், ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Post a Comment

0 Comments